இந்த 77 வது குடியரசு தின அணிவகுப்பு விழா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. புது தில்லியில் கர்த்தவ்ய பாதையில் (முன்னாள் ராஜ பாதை) குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் என் பேத்தியும் கலந்து கொண்டு வந்தேமாதரம்பாடலுக்கு ஆடியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
புது தில்லியின் கர்த்தய பாதையில் (முன்னாள் ராஜபாதை)
நடைபெறும்
முன்பு என் அண்ணனின் மகளும் ஒரு வருடம் அணிவகுப்பில் கலந்து கொண்டாள் அப்போதும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஒவ்வொரு ஆண்டும் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் அலங்கார ஊர்திகளையும் , கம்பீரமான துருப்புகளின் அணிவகுப்பையும் கண்டு களிப்போம்.
இந்த முறை பேத்தியும் கலந்து கொண்டதுமட்டற்ற மகிழ்ச்சி.
மெல்ல மெல்ல உதயமாகும் கதிரவன் (அரிசோனா) மகன் அனுப்பிய காணொளி
எங்கள் குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் விழா 11 ஆம் தேதி நடந்தது
கூடாரவல்லி அன்று பொங்கல் விழா நடந்தது
"கூடாரவல்லி வெல்லும் சீர் கோவிந்தா" பாடலின் கடைசி வரியில் ஆண்டாள் சொல்லுவது போல கூடியிருந்து குளிர்ந்தேலே ரெம்பாவாய் எல்லோரும் கூடியிருந்து பொங்கல் பிரசாதம் உண்டு மகிழ்ந்தோம்.
பொங்கல், கடலைமிட்டாய் ,ஜூஸ் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.
பொங்கல் பானை ஏற்றியாச்சு
பால் பொங்கி விட்டது
எல்லோரும் பானையில் அரிசி இட்டோம்
கலந்து கொண்டவர்கள்
உற்சாகமாக கும்மி கொட்டினார்கள்
குடியிருப்பில் பணி புரிபவர்கள் , மற்றும் இஸ்லாமியர் , கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என்று அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.
மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் கொடுத்தார் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மருத்துவர்
இவர்களும் இஸ்லாம் தான். இந்த குழந்தை நன்றாக பேசினாள்
விவசாயி படும் கஷ்டங்களை சொன்னாள்
. "நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்கமுடியும். கரும்பு பயிர் செய்தேன் யாரும் வாங்கவில்லை, வாழை நட்டேன் யாரும் வாங்க வில்லை, மஞ்சள் நட்டேன் யாரும் வாங்க வில்லை கஷ்டத்தில் வயலை ப்ளாட் போட்டு விற்றால் வாங்க நான் நீ என்று ஓடி வருகிறார்கள் வயல் எல்லாம் ப்ளாட் ஆனால் நாளை உணவுக்கு எங்கு போவார்கள் என்ற கேள்வி எழுப்பினாள்." போரைவிட சோறுதானே முக்கியம் என்றாள்.
முகம் கை , கால் எல்லாம் சேறு பூசி கொண்டு மண்வெட்டியுடன் வந்து நன்றாக பேசினாள். சின்ன மலரின் அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் நன்றாக பேசினார்கள். பாட்டி கற்க கசடற திருக்குறளுக்கு விளக்கம் அழகாய் கொடுத்தார்கள் , தாத்தா நன்றாக நகைச்சுவையாக பேசினார்.
வட நாட்டு குழந்தைகள் கண்ணன் வேஷம் போட்டு வந்து நான் கண்ணன் வந்து இருக்கிறேன் என்று சொல்லி புல்லாங்ககுழல் ஊதி காட்டினான்.
முதலில் மைக் வைத்து கொண்டு நிற்பவர் புவனா சந்திரசேகரன் எழுத்தாளர் எங்கள்வீட்டு எதிர் வீடு அவர் தான் பொங்கல் விழாவை தொகுத்து வழங்கினார். கோலபோட்டியில்கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் பரிசு அளித்தார்.
கோல போட்டியில் ஒருவர் போட்ட கோலம்
எல்லோரையும் சீட்டு எடுக்க வைத்து அதில் வருவதை பேச சொன்னார்கள்.
சிலருக்கு பாட்டு, சிலருக்கு நடனம், சிலருக்கு ஆண் போல பேசுவது, திருக்குறள் சொல்ல வேண்டும், தாலாட்டு பாட வேண்டும், ரமைஸ் சொல்ல வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்து இருந்தார்கள்.
எனக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார்கள்.நான் முன்பு முதியோர்கள் இளையவர்களை வழி நடத்தி சென்றார்கள். இப்போது இளையவர்கள் முதியவரகளை வழி நடத்தி செல்கிறார்கள் . நான் இளையவர்கள் வழி நடத்துவதில் இப்போது இருக்கிறேன் என்றேன்.
மற்றும் வளாகத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை நன்கு பார்த்து கொள்கிறார்கள். வளாக பணியாளர்கள் எல்லாம் எப்போது என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்து தருகிறார்கள் இன்முகத்தோடு, அவர்களுக்கும், மற்றும் குடியிருப்பு நிர்வாக பொறுப்பில் இருப்பவரக்ள் எல்லாம் விழாவை சிறப்பாக நடத்தியதற்கும் பாராட்டி எல்லோருக்கும் நன்றி சொல்லி பொங்கல் வாழ்த்து சொன்னேன்.
என்னை கைபிடித்து அழைத்து சென்ற பெண் பேர் கேட்டேன் கோமதி என்றார்
வளாகத்திற்கு புதிதாக வந்து இருக்கிறார்.
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் நாள் அல்லவா!
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் திருவிழா முதல் நாள் சூரியனுக்கு
அடுத்த நாள் விவசாயிகளுக்கு , விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கும் உழவு கருவிகளுக்கும் நன்றி சொல்வோம் உழவர் திருநாளில் .
வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல நெறிகளை போதிக்க உலகப்பொதுமறையை கொடுத்த திருவள்ளுவருக்கு நன்றி சொல்லுவோம்.
நம் நலம் விரும்பும் உடன்பிறந்த சகோதர்களுக்கு நன்றி சொல்லி அவர்களுக்காக கனுப்பிடி வைத்து உற்றார், உறவுகள், மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் நாள்.
உறியடி நடந்தது பெண்களுக்கு மூன்று பெண்கள் வெற்றி பெற்றார்கள்.
என் தம்பி பேரன், பேத்தி படிக்கும்பள்ளியில் அறிவியல் பொங்கல் என்று சிறப்பாக நடந்து இருக்கிறது. என் தம்பி மகள் அனுப்பிய படங்கள்.
அந்தக்கால விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் .
கல்லாங்காய்
குழந்தைகள் மாட்டு வண்டியில் ஏறி கொண்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி செல்கிறார்கள்
பனநுங்கு வண்டி ஓட்டும் தம்பி பேரன், பேத்தி.
பல்லாங்குழி
தாயம்
கிச்சு கிச்சு தாம்பூலம்
குழந்தைகள் எல்லாம் கைபேசியில் வீடியோ கேம் விளையாடாமல் இப்படி பராம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது மனதுக்கும் , உடலுக்கும் உற்சாகம் மற்றும் ஆரோக்கியம் தரும். நினைவாற்றல், கவனம் சிதறாமல் விளையாடும் திறமையும் வளரும்.
இந்த பள்ளியில் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருப்பதை பாராட்ட வேண்டும். இந்த பள்ளியில் நவராத்திரி விழாவும் சிறப்பாக நடந்தது.
இன்று தொலைகாட்சி செய்திகளில் பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பொங்கல் விழாநடந்ததை காட்டினார்கள். ஒரு பள்ளியில் நெல்லை குத்தி அரிசியாக்கி புடைத்து உமி நீக்கி குழந்தைகள் பொங்கல் வைத்தார்கள். பராம்பரிய முறையை தெரிந்து கொள்கிறார்கள். குலவை சத்தம் போடுகிறார்கள் பால் பொங்கும் போது.
2022 ஆம் வருடம் பேரன் எங்கள் வீட்டு வாசலில் பொங்கல் கோலம் வரைந்து வாழ்த்து எழுதுகிறான், ஆங்கிலத்திலும்,தமிழிலும்.
இந்த வருடம் பேரன் போட்ட பொங்கல் கோலம்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
நள்ளிரவில் மாட்டுதொழுவமதில் பிறந்த பாலகனை கொண்டாடும் பண்டிகை
பேரன் கிறிஸ்தும்ஸூக்கு தயார் செய்த அற்புத நகரம்
உலகம் முழுவதும் உள்ள கிறித்துவ மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நல் வாழ்த்துகள்.
ஏழை எளிய மக்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் உற்றார் உறவுகள், நட்புகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சி படுத்தும் நாளாக, சாண்டாகிளாஸ் வருகையை எதிர்பார்க்கும் நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
ஏசு பாலனை வரவேற்க வீடுகளில் வண்ணவிளக்கு ,மற்றும் நட்சத்திரம்
தொங்கவிடுவது , குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை. மதசார்பற்ற பண்டிகையாக இப்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் மகன், மகள் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ்மரம் மற்றும் பாடல்கள் இடம் பெறுகிறது.